லெபனானைப் போல இங்கே வெடிக்காது சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக சுங்கத்துறை விளக்கம்

சென்னை துறைமுகத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டுள்ள 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்த நிலையில், சுங்கத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் ஆறு ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 130-க்கும் அதிகமானோர் பலியாயினர். சுமார் 4000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் இறப்பு சதவிகிதம் அதிகரிக்கலாம் என அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்ச்சியாக உலக நாடுகள் தங்களது நாட்டில் உள்ள துறைமுகங்களில் சேமித்து வைத்திருக்கும் வெடிக்கக் கூடிய வேதிப்பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.

Read Full Article Here

Continue Reading

கரோனா தடுப்பு நிதி: தமிழகம் உள்பட 22 மாவட்டங்களுக்கு ரூ.890.32 கோடி நிதி

புது தில்லி: கரோனா தடுப்பு நிதியாக தமிழகம் உள்பட 22 மாவட்டங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை சார்பில் இரண்டாவது தவணையாக ரூ.890.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதி, மாநிலத்தில் நிலவும் கரோனா பாதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கீடு செய்யப்படும்.  கடந்த மார்ச் 24-ம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் கோடி கரோனா தடுப்பு நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ.3 ஆயிரம் கோடி, மத்திய அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Read Full Article here

Continue Reading

மான ரோஷம் நல்ல காமெடி.. ஜெயலலிதா காலில் நான் விழுந்ததே இல்லை .. எஸ்.வி.சேகர் தடாலடி

சென்னை: “மான ரோஷம், நல்ல காமெடி” என்று கூறி சிரித்துள்ள நடிகர் எஸ்.வி.சேகர், அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதில் தரும் வகையில் புதிதாக 2 டிவீட் போட்டு விட்டுள்ளார். சிரிப்பு நடிகர் எஸ்.வி. சேகர் அவ்வப்போது படு பகிரங்கமாக பலரையும், பல விஷயங்களையும் விமர்சிப்பது வழக்கம்தான். தடாலடியாக பேசி விடுவார். வார்த்தைகளையும் கொட்டி விடுவார். அதேசமயம், சொன்ன வார்த்தையைத் திரும்பப் பெறவும் மாட்டார். அதில் உறுதியாகவும் இருப்பார். இப்போதும் அப்படித்தான் ஒரு அதிரடியைக் காட்டியுள்ளார். ஒரு வீடியோ போட்டிருந்தார் சேகர். அதில் அதிமுகவின் கொடியிலிருந்து அண்ணா படத்தை எடுத்து விடுங்கன்னு சொல்லியிருந்தார். அவ்வளவுதான் அதிமுகவில் கொதிப்பு வரும் என்று எதிர்பார்த்தால்.. ஜெயக்குமார் மட்டும்தான் கருத்துக் கூறியிருந்தார்.

ஜெயக்குமார் வெட்கம் மானம் இருந்தால் அதிமுக சார்பில் எம்எல்ஏவாக இருந்தபோது பெற்ற சம்பளம், இப்போது அதற்காக வாங்கி வரும் ஓய்வூதியம் ஆகியவற்றை எஸ்.வி.சேகர் திரும்பத் தரட்டும் என்று ஜெயக்குமார் டபுள் ஸ்டிராங்காகவே காட்டம் காட்டியிருந்தார். இதற்கும் தற்போது எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்துள்ளார். இந்த முறை டிவீட் மட்டும்தான்.. அதுவும் 2 டிவீட் போட்டுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/sve-sekhar-replied-to-minister-jayakumar-393587.html

Continue Reading